கூட்டுறவு சங்கங்களில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரும்பூர், பழையகாயல், வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க் கடன் மற்றும் நகைக் கடன்களில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதன் அடிப்படையில் அந்த சங்கங்களில் 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப் பிரிவு 81-ன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த சங்கங்களின் செயலாளர்கள் மற்றும் சங்கப் பணியாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மீது தற்காலிக பதவி நீக்கம், நிரந்தர பதவிநீக்கம் போன்ற சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் சங்கப்பணியாளர்கள் மீது தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் நிரந்தரப் பணிநீக்கம் உள்ளிட்ட கடும் ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மீது நிர்வாகக் குழு கலைப்பு மற்றும் நிரந்தர தகுதியிழப்பு உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
புகார்கள்
மேலும் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் மீது சந்தேகங்களோ அல்லது புகார்களோ தெரிவிக்க விரும்புவோர் தொடர்புடைய சரக துணைப்பதிவாளர் அலுவலங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தூத்துக்குடி சரக துணைப்பதிவாளர் செல்போன் எண்: 7338749403, 0461-2320192, திருச்செந்தூர் சரக துணைப்பதிவாளர் செல்போன் எண்: 73387 49405, 04639-242294, கோவில்பட்டி சரக துணைப் பதிவாளர் செல்போன் எண்: 73387 49404, 04632-210370 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களையும், குறைகளையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
கூட்டுறவு நிறுவனத்தில் புதிய உறுப்பினராக சேர உள்ள பொதுமக்கள் உறுப்பினர் சேர்க்கை படிவத்தை பூர்த்தி செய்து பங்குத் தொகையாக ரூ.100 மற்றும் நுழைவுக் கட்டணமாக ரூ.10 செலுத்தி சங்கத்தில் உறுப்பினராக சேருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்துக்கு நடப்பு 2022-2023 நிதியாண்டில் ரூ.190 கோடி பயிர்க் கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பயிர்க்கடன் பெற விரும்பும் உறுப்பினர்கள் பயிர் செய்வதற்கான அடங்கல் சான்றுகளுடன் சங்கத்தில் மனு செய்து பயிர்க்கடன் பெற்று பயனடையலாம். பயிர்க்கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், மகளிர் சுய உதவிக் குழுக் கடன்கள் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் குறைகளுக்கு தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் செல்போன் எண்: 85258 58055, 0461-2347604, 0461-2347605, 0461-2347606 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.