மாணவர்கள் படிக்கட்டில் தொங்கினால் பெற்றோர் மீது நடவடிக்கை - எஸ்.பி. ஸ்ரீநாதா எச்சரிக்கை
மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களின் பெற்றோரின் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக எஸ்.பி ஸ்ரீநாதா எச்சரிக்கை விடுத்துள்ளார்
விழுப்புரம்,
பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் மேற்கொண்டால் மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது ;
இது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.மேலும் அதிக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்" படிக்கட்டில் பயணம் மேற்கொள்ளும் செயல்களில் ஈடுபாட்டால் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர், பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story