முறையற்ற முறையில் மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்தால் நடவடிக்கை
முறையற்ற முறையில் மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்தால் நடவடிக்கை என்று கலெக்டர் பாஸ்கரபாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் காணொலி மூலம் பேசியதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்கள் அனைவரும் ஒழுங்கான, நாகரிகமான முறையில் முடி திருத்தம் செய்து பள்ளிக்கு வரவேண்டும்.
பள்ளி தலைமைஆசிரியர்களும், பெற்றோர்களும் அதை கண்காணிக்க வேண்டும்.
முறையற்ற முறையில் மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்யும் சலூன் கடைகாரர்கள் மீது தக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுமட்டுமின்றி ஒழுங்கற்ற முறையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு முடியை திருத்தம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பள்ளிக்கே சென்று முடி திருத்தம் செய்யப்படும்.
இவ்வாறு அதில் அவர் பேசியுள்ளார்.
Related Tags :
Next Story