அனுமதி இல்லாத பருத்தி விதையை விற்றால் நடவடிக்கை
அனுமதி இல்லாத பருத்தி விதையை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என விடுத்துள்ளார்
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் பருத்தி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதிலும் குறிப்பாக காய்ப்புழு எதிர்ப்பு சக்தி உடைய பி.டி. ரக பருத்தி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் காய்ப்புழு எதிர்ப்பு சக்தி உடைய பி.டி. ரக பருத்தி விதை மட்டுமே விற்பனை செய்வதற்கும், சாகுபடி மேற்கொள்வதற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பருத்தியில் களைக்கொல்லி எதிர்ப்பு சக்தி உடைய மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளை உற்பத்தி செய்வதற்கோ, விற்பனை செய்வதற்கோ, சாகுபடி செய்வதற்கோ அரசு அனுமதி வழங்கவில்லை. மத்திய அரசின் அனுமதி பெறாத களைக்கொல்லிகளை தாங்கி வளரக்கூடிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளை சிலர் விற்பனை செய்ய முயல்வதாக தெரிய வருகிறது. இந்த விதைகளை விற்பதும், வாங்கி சாகுபடி செய்வதும் சட்டப்படி குற்றமாகும். இதற்கு மாறாக மத்திய அரசினால் அனுமதி வழங்கப்படாத களைக்கொல்லி எதிர்ப்பு சக்தி உடைய பருத்தி விதைகளை சட்டத்தை மீறி விற்பனை மற்றும் சாகுபடி செய்வோர் மீது விதை கட்டுப்பாட்டு ஆணை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் வனஜா கூறினார்.