அனுமதிக்கப்படாத நேரத்தில் மதுபானங்கள் விற்றால் நடவடிக்கை


அனுமதிக்கப்படாத நேரத்தில் மதுபானங்கள் விற்றால் நடவடிக்கை
x

அனுமதிக்கப்படாத நேரத்தில் மதுபானங்கள் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கள்ளச்சாராயம் விற்பனை செய்வதை தடுப்பது மற்றும் மதுபான விற்பனையை ஒழுங்குபடுத்துவது குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் முன்னிலை வகித்தார்.

கரூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதை தடுப்பது, போலி மதுபானம், பிற மாநில மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுப்பது, நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கு விற்கவும், கூடுதலாக மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுப்பது மற்றும் சந்துக்கடைகளில் விற்பனை செய்வதை தடுப்பது தொடர்பாகவும் கரூர் மாவட்டத்தில் வழங்கப்படும் அனைத்து உரிமங்களையும் (ஆர்.எல்.2, டி.எல்.2, என்.டி.ஆர்.சி, எம்.எல்.2 மற்றும் எப்.எல்.3) மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினரால் ஆய்வு செய்து வெள்ளிக்கிழமை தோறும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் டாஸ்மாக் கடைகள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் (மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை) மதுபானங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும்.

அனுமதிக்கப்படாத நேரத்தில் மதுபானங்கள் விற்பனை செய்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுபானக்கடைகளில் விற்பனை செய்யும் மதுபாட்டில்களின் விலை தொடர்பான விற்பனை பட்டியலை கடைக்கு முன்பாக தெளிவாக தெரியும் வண்ணம் விளம்பர பலகை வைக்கப்பட வேண்டும்.

அனுமதி பெறாத இடங்களில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யும் நபர்களை தீவிரமாக கண்காணித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.


Next Story