கூடுதலாக வாடகை வாங்கினால் நடவடிக்கை
தனியார் அறுவடை எந்திரங்களுக்கு கூடுதலாக வாடகை வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு நெல் அறுவடை பணிகளுக்கு தனியார் அறுவடை எந்திரங்களுக்கான வாடகையை முறைப்படுத்தக்கோரி வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள், தனியார் அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்த முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விவாதித்தபடி பெல்ட் வகை அறுவடை எந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,700-ம், செயின் வகை அறுவடை எந்திரத்திற்கு ரூ.2,500 எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தொகைக்கு கூடுதலாக அறுவடை எந்திர உரிமையாளர்கள், விவசாயிகளிடம் வாடகை வசூல் செய்யப்படுவதாக புகார் ஏதும் பெறப்பட்டால், அதன் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சி.பழனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story