காலை உணவு திட்ட மைய பொறுப்பாளர் பணி நியமனத்திற்கு பணம் பெற்றால் நடவடிக்கை: கலெக்டர் தகவல்


காலை உணவு திட்ட மைய பொறுப்பாளர் பணி நியமனத்திற்கு பணம் பெற்றால் நடவடிக்கை: கலெக்டர் தகவல்
x

காலை உணவு திட்ட மைய பொறுப்பாளர் பணி நியமனத்திற்கு பணம் பெற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

கரூர்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கரூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில், மையப் பொறுப்பாளர் பணியானது நிரந்தர பணியல்ல. இது ஒரு தற்காலிக பணியாகும். இப்பணிக்கு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராகவும், அவர்களின் குழந்தைகள் அதே பள்ளியில் பயில்பவராகவும் இருக்க வேண்டும். அக்குழந்தைகள் அப்பள்ளியிலிருந்து பிற பள்ளிக்கோ அல்லது ஆரம்ப வகுப்பிலிருந்து உயர் வகுப்பிற்கு செல்லும் போதோ பணிபுரியும் அந்த சுய உதவிக்குழு உறுப்பினருக்கு பதிலாக தகுதியுள்ள மாற்று சுய உதவிக்குழு உறுப்பினர் பணியமர்த்தப்படுவர். இந்த தற்காலிக பணிக்கு ஊராட்சி மன்ற தலைவரோ அல்லது இதர உள்ளாட்சி பிரதிநிதிகள் எவரேனும் பணி நியமனத்திற்கு பணம் கோருவதாக புகார் எழும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story