அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பவர்களுக்கு மூலப்பொருட்கள் வழங்கினால் நடவடிக்கை


அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பவர்களுக்கு மூலப்பொருட்கள் வழங்கினால் நடவடிக்கை
x

அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பவர்களுக்கு மூலப்ெபாருட்கள் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விருதுநகர்

விருதுநகர்,

அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பவர்களுக்கு மூலப்ெபாருட்கள் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கலந்தாய்வு கூட்டம்

விருதுநகர் மாவட்ட போலீஸ் நிர்வாகம் மாவட்டத்தில் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களான பொட்டாசியம் குளோரைடு மற்றும் கந்தகம் ஆகியவற்றை வினியோகம் செய்யும் உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் 58 பேருடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தியது.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாவட்டத்தில் உரிமம் பெற்ற பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே மூலப்பொருட்களான பொட்டாசியம் குளோரைடு, கந்தகம் ஆகியவற்றை வினியோகிக்க வேண்டும் என்று உரிமம் பெற்ற மூலப்பொருள் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

எச்சரிக்ைக

அனுமதியின்றி பட்டாசு தயாரிப்போருக்கு பொட்டாசியம் குளோரைடு மற்றும் கந்தகம் போன்ற மூலப்பொருட்களை வினியோகிக்கும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

மாவட்டத்தின் மேற்குப்பகுதியில் தினசரி போலீசார் அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட பட்டாசு பண்டல்களை பறிமுதல் செய்து கைது நடவடிக்கை எடுப்பது தொடர்கிறது. ஆனால் கைது செய்யப்படுபவர்கள் உடனடியாக ஜாமீனில் விடப்படும் நடைமுறையும் உள்ளது. அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் மையங்களுக்கு சென்று தயாரிப்பு நிலையிலேயே தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தெரியவில்லை.

வலியுறுத்தல்

இதேபோன்று மாவட்ட நிர்வாகமும் பல்துறை அலுவலர் அடங்கிய ஆய்வுக்குழுவை நியமித்துள்ளது. இந்த ஆய்வுக் குழுவினரும் உரிமம் பெற்ற பட்டாசுஆலைகளுக்கு சென்று விதிமீறல்களை கண்டறியும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகமும், மாவட்ட போலீஸ் நிர்வாகமும் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்போர் மீது நடவடிக்கை எடுக்க தனிக்குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story