நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்டால் நடவடிக்கைகுடிமை பொருள் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்டால் நடவடிக்கைகுடிமை பொருள் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 17 Feb 2023 1:00 AM IST (Updated: 17 Feb 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

குடிமை பொருள் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

ஈரோடு

தமிழக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தலைமையில் ஈரோடு சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஈரோடு மண்டல மேலாளர் பானுமதி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திடீர் ஆய்வு செய்தனர்.

ஈரோடு மாவட்டம் நசியனூர், காஞ்சி கோவில், பெத்தாம்பாளையம், பள்ளபாளையம் ஆகிய இடங்களில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு விவசாயிகளிடம் இருந்து முறையாக கொள்முதல் செய்யப்படுகிறதா என ஆய்வு செய்ததுடன் அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தனர். மேலும் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி எச்சரிக்கை விடுத்தார்.


Next Story