தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
இலங்கையின் கட்டுப்பாட்டிலுள்ள 100 மீன்பிடி படகுகளை விடுவிக்க மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு எழுதி உள்ள கடிதத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத் துறை மந்திரி எஸ். ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
தமிழகத்தை சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் நவம்பர் 5ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளது குறித்தும், அவர்களது இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறித்தும் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ். ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு அரசு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், பாக்ஜல சந்திப்பில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் தடையின்றி தொடர்வதாகவும், இது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியை நம்பியிருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய, தூதரக வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இலங்கையில் கட்டுப்பாட்டில் உள்ள 100 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் உதவிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.