ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்கள் மீது 15 நாட்களில் நடவடிக்கை-கலெக்டர்


ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்கள் மீது 15 நாட்களில் நடவடிக்கை-கலெக்டர்
x

ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்கள் மீது 15 நாட்களுக்குள்ளாக நடவடிக்கை எடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு

ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்கள் மீது 15 நாட்களுக்குள்ளாக நடவடிக்கை எடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

ஜமாபந்தி

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது.

தண்டராம்பட்டு தாலுகாவில் உள்ள தானிப்பாடி, தண்டராம்பட்டு வாணாபுரம் ஆகிய உள்வட்டங்களுக்கான ஜமாபந்தி நேற்று 3-வது நாளாக நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைைம தாங்கி பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

அதைத்தொடர்ந்து நேற்று மாலை ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சி என். அண்ணாதுரை, செங்கம் மு.பெ.கிரி எம்.எல்.ஏ., ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தாசில்தார் அப்துல் ரகூப் வரவேற்றார்.

இதில் தண்டராம்பட்டு, தானிப்பாடி, வாணாபுரம் ஆகிய உள்வட்டங்களை சேர்ந்த 63 கிராமங்களில் இருந்து 1133 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது விசாரணை செய்து 200 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார். அதைத்தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-

மாநிலத்தில் முதலிடம்

தமிழகத்திலேயே முதியோர் உதவித்தொகை பயனாளிகளில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 12 தாலுகாக்களில் மாவட்ட அலுவலர்களை நியமித்து பொது மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களை விசாரணை செய்து விரைந்து தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று அனைத்து துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் பொதுமக்கள் அளித்த மனு 15 நாட்களுக்குள்ளாக விசாரணை செய்து நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்றும். அனைத்து அலுவலர்களும் உத்தரவு பிறப்பித்து பொது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பணியாற்ற வேண்டும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பயிற்சி கலெக்டர் ஸ்ருதி ராணி, துணை தாசில்தார் விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் மு. பன்னீர்செல்வம், கோ.ரமேஷ், பி.கோவிந்தன் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போளூர்

போளூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி 3-வது நாளாக நடந்தது.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சந்தவாசல் உட்பிரிவு கிராமங்களை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர்.அதன்படி பட்டா மாற்றம் செய்ய 29 பேரும், வீட்டுமனை பட்டா மாற்றம் செய்ய 48 பேரும் உட்பிரிவு மாற்றம் செய்ய 52 பேரும், முதியோர் உதவித்தொகை கேட்டு 4 பேரும் மனு அளித்தனர்.

இவர்கள் உள்பட மொத்தம் 158 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டன.

செங்கம்

செங்கம் தாலுகா அலுவலகத்தில் நேற்று 3-வது நாளாக ஜமாபந்தி நடைபெற்றது. மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) வ.தேன்மொழி தலைமை தாங்கி இதனை நடத்தினார்.செங்கம் தாசில்தார் முனுசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரேணுகா மற்றும் அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் இறையூர் உள்வட்டதிற்கு உட்பட்ட இறையூர், அம்மாபாளையம் உள்ளிட்ட கிராம பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஜமாபந்தி அலுவலர் தேன்மொழியிடம் வழங்கினர்.


Next Story