காங்கிரஸ் கட்சி கொடியை எரித்த பா.ஜனதா கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

காங்கிரஸ் கட்சி கொடியை எரித்த  பா.ஜனதா கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

காங்கிரஸ் கட்சி கொடியை எரித்த பா.ஜனதா கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பினுலால்சிங், மாநகர் மாவட்டத் தலைவர் நவீன்குமார் மற்றும் பலர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காங்கிரஸ் கட்சி நடத்தும் போராட்டங்களை கண்டித்து பா.ஜனதா கட்சி சார்பில் குழித்துறை சந்திப்பில் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தில் நிர்வாகிகள் சிலர் காங்கிரஸ் கட்சியை தரக்குறைவான முறையில் இழிவுபடுத்தி பேசி உள்ளனர். திடீர் என்று காங்கிரஸ் கட்சிக் கொடியை ரோட்டில் போட்டு காலால் மிதித்து மண்எண்ணெய் ஊற்றி எரித்து அவமதித்தனர். எனவே காங்கிரஸ் கட்சி கொடியை எரித்த பா.ஜனதா கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story