தி.மு.க.வினர் பற்றி அவதூறாக பாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
தி.மு.க.வினர் பற்றி அவதூறாக பாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
வேலூர் மாவட்ட தி.மு.க. மகளிரணி சார்பில் மாநில மகளிரணி பிரசாரக்குழு செயலாளர் வி.அமலுவிஜயன் எம்.எல்.ஏ. தலைமையில் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வேலூர் மேயர் சுஜாதா, வேலூர் மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி, மாவட்ட மகளிரணி தலைவி ஜெயந்தி, அமைப்பாளர் வாசுகி, இளைஞரணி அமைப்பாளர் ராஜமார்த்தாண்டம் மற்றும் நிர்வாகிகள் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் மனு அளித்தனர்.
அதில் மதுரையில் கடந்த 20-ந் தேதி அ.தி.மு.க. மாநாடு நடைபெற்றது. அதில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோரை அவதூறாகவும், ஆபாசமாகவும் பாட்டுப்பாடி, அநாகரிகமான முறையில் சிலர் திட்டினார்கள். அதனை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் கைத்தட்டி ரசித்தனர்.
பொதுவெளியில் அரசியல் தலைவர்களை விமர்சனம் என்ற பெயரில் தனிமனித சுதந்திரத்தை கொச்சைப்படுத்தியும், உண்மைக்கு மாறாக தனிப்பட்ட முறையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோரை அவதூறாக, ஆபாசமாக திட்டி பாட்டுப்பாடிய நபர்கள், மாநாட்டை நடத்திய அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.