தரமற்ற விதைகள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தரமற்ற விதைகள் விற்பனை செய்வதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேளாண் அலுவலர்களுக்கு விதைச்சான்று உதவி இயக்குனர் வளர்மதி அறிவுறுத்தி உள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தரமற்ற விதைகள் விற்பனை செய்வதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேளாண் அலுவலர்களுக்கு விதைச்சான்று உதவி இயக்குனர் வளர்மதி அறிவுறுத்தி உள்ளார்.
ஆலோசனைக் கூட்டம்
மயிலாடுதுறையில் விதைச்சான்று அலுவலர்கள் மற்றும் விதைபரிசோதனை நிலைய வேளாண் அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குனர் வளர்மதி தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சம்பா, தாளடி பருவத்தில் நெல் விதைப்பண்ணைகள் இலக்குப்படி பதிவு மேற்கொண்டு கொள்முதல் மேற்கொள்ள வேண்டும். அரசு மற்றும் தனியாரிடம் இருப்பில் உள்ள உளுந்து, பயறு விதைகளை சுத்தம் செய்து சான்றட்டை பொருத்தி நெல் தரிசில் உளுந்து, பயிறு சாகுபடிக்கு வினியோகித்திட இம்மாத இறுதிக்குள் விற்பனை மையங்களுக்கு அனுப்ப வேண்டும்.
நடவடிக்கை
விதை விற்பனை நிலையங்களில் இலக்குப்படி மாதிரிகள் எடுத்து விதையின் தரத்தினை உறுதிப்படுத்தி தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமற்ற விதைகள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விதை பரிசோதனை நிலையங்களில் பெறப்படும் விதைகளை உடனுக்குடன் பகுப்பாய்வு செய்து முடிவுகளை வழங்க வேண்டும்.
தரமான விதைகள் விவசாயிகளை சென்றடைவதற்கு விதைச்சான்று அலுவலர்கள், வேளாண் துறையினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மயிலாடுதுறை வேளாண் இணை இயக்குனர் சேகர், நாகை வேளாண் இணை இயக்குனர் ஜாக்குலஅகண்டராவ், விதை ஆய்வு துணை இயக்குனர் தேவேந்திரன், விதைச்சான்று உதவி இயக்குனர் சுதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.