பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீசாருக்கு சூப்பிரண்டு உத்தரவு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் மாதாந்திர குற்றம் சம்பந்தமான கலந்தாய்வு கூட்டம் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பள்ளி வளாக கூட்டரங்கில் போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவஹர்லால், விஜயகார்த்திக்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்டம் முழுவதும்போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்த சூப்பிரண்டு மோகன்ராஜ் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வை விரைவாக பெற்றுத்தர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் நிலைய பொறுப்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story