மன்னார்குடி வாலிபரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை
மன்னார்குடி வாலிபரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை
திருவாரூர்
மன்னார்குடி கோபாலசமுத்திரம் மேலவீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்.
இவரது மகன் ராஜகோபால் (வயது 31). இவரது தந்தை ஏற்கனவே இறந்துவிட்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராஜகோபால் கத்தார் நாட்டிற்கு வேலைக்காக சென்றுள்ளார். அங்கு சலவை நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜகோபால் அவரது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் பத்மாவிற்கு தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பத்மா, இதுகுறித்து திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனுக்கு நேற்று ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில் தனது மகன் கத்தாருக்கு வேலைக்கு சென்ற நிலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்துள்ளது. ஆகவே எனது மகனது உடலை மீட்டு சொந்த ஊரான மன்னார்குடிக்கு கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story