குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை-செந்தில்நாதன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை
சிவகங்கை,
சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்நாதன் சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியகோட்டை, வி.புதுக்குளம், வேம்பத்தூர், அண்ணாநகர், இந்திரா நகர், லட்சுமிபுரம், மிக்கேல்பட்டினம், கல்லூரணி, பச்சேரி, பாப்பாங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அவர் வேம்பத்தூர் பகுதியில் செல்லும்போது, அங்குள்ள கண்மாயில் 100 நாள் வேலை திட்டத்தில் பெண்கள் வேலை பார்த்து கொண்டு இருந்ததை பார்த்ததும் தொடர்ந்து அவர் அங்கு சென்று அந்த பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர்கள் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாகவும், அதை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தெரிவித்தார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன் மற்றும் மானாமதுரை வடக்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீதரன் மற்றும் பலர் உடனிருந்தனர்