வாகன சோதனையில் ஈடுபடுவதை தவிர்க்க நடவடிக்கை
விருதுநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வாகன சோதனை
வாகன விதிமீறல்களைகண்டறிய போலீசார் நெடுஞ்சாலைகளிலும், நகர்ப்புறங்களில் உள்ள சாலைகளிலும் வாகன சோதனையில் ஈடுபடும் நிலை உள்ளது. இந்த வாகன சோதனை நடவடிக்கை அவசியமும், அத்தியாவசியமுமாகும். ஆனால் போலீசார் நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபடுவதால் வாகன விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது.
இதில் நடந்து செல்லும் பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலையே உள்ளது. நேற்று காலை விருதுநகர் ெரயில்வேபீடர் ரோட்டில் ராமர் கோவில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒருபுறம் கோவிலையொட்டி உள்ள கந்தபுரம் தெரு வழியாக ெரயில் நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள், மறுபுறம் மேலும் ெரயில்வே பீடர் ரோட்டில் தெற்கிலிருந்து வரும் வாகனங்கள், ராமமூர்த்தி ரோட்டில் இருந்து மாவட்டத்தின் மேற்கு பகுதியில் இருந்து ெரயில் நிலையத்திற்கு வரும் வாகனங்கள் என போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து நெரிசல்
இதனால் அப்பகுதியில் வந்த கார் மோதியதில் நடந்து சென்ற 5 பேர் படுகாயம் அடைந்தனர். அதே பகுதியில் லாரி அலுவலகம் ஒன்று உள்ளதால் அந்த அலுவலகம் முன்பு லாரிகளை நிறுத்தி சரக்குகளை ஏற்றுவதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் விருதுநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபடுவதை தவிர்த்து விசாலமான பகுதிகளில் நின்று வாகன சோதனையில் ஈடுபட உரியஅறிவுறுத்தல் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இல்லையேல் வாகன விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடும்.