விசாரணை நடைமுறைகளை விரைவுப்படுத்த நடவடிக்கை


விசாரணை நடைமுறைகளை விரைவுப்படுத்த நடவடிக்கை
x

விருதுநகர் மாவட்ட போலீஸ் குற்றப்பிரிவில் விசாரணை நடைமுறைகளை விரைவுப்படுத்த மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்


விருதுநகர் மாவட்ட போலீஸ் குற்றப்பிரிவில் விசாரணை நடைமுறைகளை விரைவுப்படுத்த மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு

மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரிலும், நீதிமன்றங்களின் உத்தரவின் பேரிலும் வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விதிமுறை. விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு துணைபோலீஸ் சூப்பிரண்டு தலைமையில் செயல்பட்டு வரும் நிலையில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு மற்றும் விசாரணை நடைமுறைகளில் மிகுந்த கால தாமதம் ஏற்படும் நிலை தொடர்கிறது. கடந்த 2004-ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவில் விருதுநகரை சேர்ந்த தொழிலதிபரிடம் கடன் வாங்கி தருவதாக திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு கும்பல் பணம் பறித்தது பற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட தொழிலதிபரும் இறந்துவிட்ட நிலையில் இன்னும் இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

பண மோசடி

இதேபோன்று சிவகாசியை சேர்ந்த தொழிலதிபரின் வங்கி கணக்கில் ரூ.65 லட்சம் மோசடி செய்யப்பட்ட நிலையில் வங்கி ஊழியர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கும் இன்னும் நிலுவையில் உள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்டு 19 ஆண்டுகள் ஆகியும் இன்னும் வழக்கு முடிவடையாத நிலை நீடிக்கிறது.

மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக சிவகாசியை சேர்ந்த சிலர் பண மோசடி செய்து விட்டதாக ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டதாரி ஒருவர் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டிடம் கொடுத்த புகார் மனு மீது தற்போது தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்வதற்கு 8 மாதங்கள் ஆகியுள்ளது. விசாரணை நடைமுறை தொடர்பாகவும் பல்வேறு புகார்கள் கூறப்படும் நிலை உள்ளது.

வலியுறுத்தல்

எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் மாவட்ட குற்றப்பிரிவில் விசாரணை மற்றும் வழக்குப்பதிவு நடைமுறைகளில் தாமதத்தை தவிர்த்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story