கைதிகள் நடத்தும் அங்காடிகள் திறக்க நடவடிக்கை
வேலூர் ஜெயிலில் கைதிகள் நடத்தும் அங்காடிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வேலூர்
வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் ஜெயில் உள்ளது. இங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு சிறையின் வெளியே நன்னடத்தை கைதிகள் மூலம் அங்காடிகள் நடத்தப்பட்டது. முடி திருத்தம், உணவகம் உள்ளிட்ட அங்காடிகளை கைதிகள் நடத்தி வந்தனர். அதில் பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து அந்த அங்காடிகள் அனைத்தும் மூடப்பட்டன. அந்த கட்டிடங்கள் நாளடைவில் பாழடைய தொடங்கியது.
இந்த நிலையில் சிறை அங்காடிகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த பணிகள் முடிக்கப்பட்டு அங்காடிகள் அனைத்தும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story