பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்து தர நடவடிக்கை


பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்து தர நடவடிக்கை
x

சதுரகிரி கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்


சதுரகிரி கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை வசதி

வத்திராயிருப்பை சேர்ந்த கூடலிங்கம் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

சதுரகிரி கோவிலுக்கு அமாவாசை, பிரதோஷம், பவுர்ணமி போன்ற நாட்களில் அதிக எண்ணிக்கையில் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான அளவு கழிவறை, தண்ணீர் வசதி இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.

எனவே இது குறித்து ஆய்வு செய்து பக்தர்களின் வசதிக்காக அடிப்படை வசதிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்படுள்ளது.

இந்திய மாணவர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட குழுவினர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், ஆதி திராவிடர், பழங்குடியினர், கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

நடவடிக்கை

விருதுநகரை சேர்ந்த சமூக ஆர்வலர் சக்திவேல் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், விருதுநகர் நகர கூட்டுறவு வங்கியில் கடந்த 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை கடன் வழங்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் விவரம் கேட்டதற்கு பதில் அளிக்க மறுக்கும் நிலையில் அதனை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரியுள்ளார்.


Next Story