வேலூர் கிரீன்சர்க்கிள் அளவை குறைக்க நடவடிக்கை


வேலூர் கிரீன்சர்க்கிள் அளவை குறைக்க நடவடிக்கை
x

போக்குவரத்து நெரிசலை தடுக்க வேலூர் கிரீன்சர்க்கிளின் அளவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வேலூர்

போக்குவரத்து நெரிசலை தடுக்க வேலூர் கிரீன்சர்க்கிளின் அளவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கலெக்டர் ஆய்வு

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இந்த போக்குவரத்து மாற்றத்தால் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று அங்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், உதவி கலெக்டர் பூங்கொடி, தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் அதிபதி, பொறியாளர் ஜெயக்குமார், தலைமை அதிகாரி ஜெயராம் அமர்பாபு, பொது மேலாளர் சாம்சன், சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் வெங்கடேஸ் பாலசுப்பிரமணியன், தாசில்தார் செந்தில் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர். அப்போது கடைகள் முன்பு வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும். மேம்பால பகுதியில் தேவையற்ற மின் வயர்களை அகற்ற வேண்டும். அறிவிப்பு பலகையை மாற்ற உத்தரவிடப்பட்டது.

இந்த ஆய்வு குறித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறியதாவது:-

கிரீன் சர்க்கிள் அளவு குறைப்பு

கிரீன்சர்க்கிள் பகுதியில் ஆய்வுக்கு பின்னர் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி வாகன ஓட்டிகள் பின்பற்ற வேண்டிய வழிகள் குறித்து முன்கூட்டியே சரியான பலகைகள் வைக்கப்பட உள்ளது. போக்குவரத்து சீராக இருக்க 6 வழிச் சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலைகள் விரிவுபடுத்தப்படும். 6 வழிச் சாலையின் அகலத்திற்கு ஏற்ப கிரீன்சர்க்கிளின் அளவு குறைக்கப்பட உள்ளது. கிரீன் சர்க்கிள் மற்றும் அதைச்சுற்றி உள்ள சாலையின் முழு அகலத்திற்கும் ஒரே மாதிரியான சாலை அமைக்கப்பட உள்ளது.

மேலும் கிரீன் சர்க்கிள் கிழக்குப்பகுதியில் உள்ள முக்கோண வடிவ தீவு போன்ற பகுதி அகற்றப்பட உள்ளது. கிரீன் சர்க்கிள் பகுதியில் பாதசாரிகள் கடப்பதற்கு போதுமான வழி ஏற்படுத்தப்பட உள்ளது. வாகன ஓட்டிகள் பாதையை மாற்றுவதற்கு ஏதுவாக எக்ஸ் வடிவ அடையாளங்கள் மற்றும் தேவையான திசைதிருப்பத்திற்கான தடுப்புகள் முன்கூட்டியே வைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story