சேலத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி: அம்பேத்கர் சிலையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை


சேலத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி:  அம்பேத்கர் சிலையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை
x

சேலத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக அம்பேத்கர் சிலையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம்

சேலம்:

ரெயில்வே மேம்பாலங்கள்

சேலம் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ரெயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் ரெயில் செல்லும் நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதையடுத்து அங்கு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையால் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நிறைவடையாமல் பாதியில் நிற்கிறது. அதாவது, ஒரு பகுதியில் மேம்பால பணிகள் 90 சதவீதம் முடிந்தநிலையில், மற்றொரு பக்கம் பாலத்தின் கட்டுமான பணி நடைபெறாமல் உள்ளது.

அம்பேத்கர் சிலை

மேலும் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியால் தொங்கும் பூங்கா அருகில் உள்ள அம்பேத்கர் சிலையை வேறு இடத்துக்கு மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு அரசியல் கட்சியினர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் சுந்தர் லாட்ஜ் எதிரே 4 ரோடுகள் சந்திப்பு இருக்கும் பகுதியில் அம்பேத்கர் சிலையை மாற்றி வைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில், அம்பேத்கர் சிலையை அங்கிருந்து சற்று தொலைவில் மாற்றி அமைக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அங்கு சிலையை வைக்கக்கூடிய இடத்தை அதிகாரிகள் அளவீடு செய்து அங்கு பணியை தொடங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, விரைவில் அம்பேத்கர் சிலை மாற்றி அமைக்கும் பட்சத்தில் ரெயில்வே மேம்பால பணிகள் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story