சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை


சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை
x

ராஜபாளையத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

விருதுநகர்

ராஜபாளையம்,


ராஜபாளையத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

சர்வீஸ் சாலை

ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரெயில்வே மேம்பாலம் பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சத்திரப்பட்டி ரெயில்வே மேம்பால பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் சாலை அமைக்கும் பணி முடிவடையும். இதையடுத்து அடுத்தமாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக்காட்சி மூலம் இந்த சாலையை திறந்து வைப்பார்.

வளர்ச்சி திட்ட பணிகள்

அதேபோல நகரின் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக பஞ்சு மார்க்கெட் நேரு சிலையில் இருந்து சொக்கர் கோவில் வரை உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் சிறிய மழை பெய்தால் கூட பள்ளத்தில் தண்ணீா் தேங்கி நின்று விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

ஆதலால் இந்த சாலையை சீரமைக்க மதுரையில் உள்ள நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். ராஜபாளையம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை காரணம் காட்டி சாலை அமைக்கும் பணிகள் தாமதம் ஆகி வருகிறது. ஆதலால் வளர்ச்சி திட்ட பணிகளையும், சாலை அமைக்கும் பணிகளையும் விரைந்து முடிக்கும் படி அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளேன். ராஜபாளையத்தில் அனைத்து பகுதிகளில் சாலை அமைத்து ெகாடுத்து சீரான போக்குவரத்து நடைபெற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது உதவிப்பொறியாளர் ராமகிருஷ்ணன், கூட்டுறவு வங்கி தலைவர் பாஸ்கர், கவுன்சிலர்கள் கார்த்திக் குருசாமி, குமார், தகவல் தொழில்நுட்ப அணி ஹரீஷ், நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story