புதிதாக உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை


புதிதாக உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை
x

ஜோலார்பேட்டை பகுதியில் புதிதாக உழவர் சந்தை அமைக்க தேவராஜி எம்.எல்.ஏ. ஆய்வுசெய்தார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நிலத்தில் விளையும் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை அருகே உள்ள திருப்பத்தூர் பகுதிக்கு சென்று விற்பனை செய்து வந்தனர். இதனால் விவசாயிகளுக்கு கூடுதலாக செலவுகள் ஏற்பட்டு, குறைவான லாபம் கிடைத்தது.

இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விளைபொருட்களை விற்பனை செய்ய உழவர் சந்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று நேற்று ஜோலார்பேட்டை அருகே மேட்டுசக்கரகுப்பம் பகுதியில் உழவர்சந்தை அமைப்பதற்கான இடத்தை திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் விரைவில் ஜோலார்பேட்டை பகுதியில் புதிதாக உழவர் சந்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் எடுத்து வருவதாக தெரிவித்தார்.

ஆய்வின்போது ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன், ஜோலார்பேட்டை நகரமன்ற தலைவர் காவியாவிக்டர், துணைத்தலைவர் இந்திரா பெரியார்தாசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story