தினத்தந்தி செய்தி எதிரொலியால் வேலூரில் போக்குவரத்து போலீஸ் பூத்கள் அமைக்க நடவடிக்கை


தினத்தந்தி செய்தி எதிரொலியால் வேலூரில் போக்குவரத்து போலீஸ் பூத்கள் அமைக்க நடவடிக்கை
x

தினத்தந்தி செய்தி எதிரொலியால் வேலூரில் போக்குவரத்து போலீஸ் பூத்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

வேலூர்

தினத்தந்தி செய்தி எதிரொலியால் வேலூரில் போக்குவரத்து போலீஸ் பூத்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

வேலூர் மாநகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீஸ் பூத்கள் உள்ளன. இந்த பூத்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. பல பூத்களில் கண்ணாடிகள் உடைந்தும், போலீசார் அமர்ந்து பணி செய்ய முடியாத வகையிலும் காணப்பட்டது. பல்வேறு இடங்களில் இந்த போலீஸ் பூத்கள் இல்லாமல் உள்ளதால் போலீசார் வெயிலில் நின்றுக்கொண்டு பணியாற்ற வேண்டிய நிலையும் உள்ளது.

எனவே போலீஸ் பூத்களை சரிசெய்ய வேண்டும் என்றும் பல்வேறு இடங்களில் அடிப்படை வசதிகளுடன் கூடிய போலீஸ் பூத்கள் புதிதாக அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து தினத்தந்தியில் விரிவான கட்டுரை வெளியானது.

இதையடுத்து தற்போது வேலூர் நேஷ்னல் தியேட்டர் சந்திப்பு பகுதியில் புதிதாக போக்குவரத்து போலீஸ் பூத் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், முதல்கட்டமாக நேஷ்னல் தியேட்டர் சந்திப்பு பகுதியில் போலீஸ் பூத் அமைக்கப்படுகிறது. மேலும் சில இடங்களில் அமைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். தேவைக்கேற்ப வெயில் காலம் வரும் முன்பு இந்த போலீஸ் பூத்கள் அமைக்கப்படும் என்றனர்.



Next Story