வாரச்சந்தை பகுதிக்கு காய்கறி கடைகளை மாற்ற நடவடிக்கை
சோளிங்கர் மார்க்கெட்டில் புதிய கட்டிடம் கட்ட இருப்பதால் வாரச்சந்தை பகுதிக்கு காய்கறி கடைகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை
சோளிங்கர் நகராட்சி பஜார் தெருவில் இயங்கி வரும் தினசரி மார்க்கெட் கட்டிடம் 40 ஆண்டு பழமை வாய்ந்தது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் மளிகை கடை இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் நகராட்சி நிர்வாகம் மூலம் ரூ.1 கோடியே 64 லட்சம் மதிப்பில் விரைவில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.
இதனால் தினசரி மார்க்கெட் வியாபாரிகளுக்கு வாரச்சந்தை பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்க நகராட்சி ஆணையர் பரந்தாமன், துணைத் தலைவர் பழனி, நகராட்சி உறுப்பினர்கள் அசோகன், சிவானந்தம், மணிகண்டன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தினசரி மார்க்கெட்டில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கும் வரை வாரச்சந்தை பகுதியில் காய்கறிகள் கடைகள் இயங்கும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story