பெண்கள் விடுதி, குழந்தைகள் காப்பகங்களை பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை
பெண்கள் விடுதி, குழந்தைகள் காப்பகங்களை பதிவு செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
பெண்கள் விடுதி, குழந்தைகள் காப்பகங்களை பதிவு செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
பதிவு செய்ய வேண்டும்
தமிழக அரசின் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தின்கீழ் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், அறக்கட்டளைகள், சங்கங்கள் மற்றும் மதம் சார்ந்த நிறுவனங்கள், கல்லூரிகள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள் மற்றும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் மற்றும் தனிநபர் ஆகியோரால் நடத்தப்பட்டு வரும் பெண்கள் விடுதிகள் மற்றும் குழந்தைகள் இல்லங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்காலிகமாக நடத்தும் விடுதிகள் அனைத்தையும் சமூக நலத்துறை அலுவலகத்தில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.
எனவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் விடுதிகள் குறித்து உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வரும் 31.12.22-க்குள் பதிவு செய்ய வேண்டும்.
நடவடிக்கை
குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்ய தவறினால் விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ள பள்ளி குழந்தைகள் விடுதி மற்றும் குழந்தைகள் இல்லங்கள் பதிவிற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை அணுக வேண்டும்.
இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.