விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்: கலெக்டர் பேச்சு


விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்: கலெக்டர் பேச்சு
x

விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என புகழூரில் நடந்த குடிகள் மாநாட்டில் கலெக்டர் கூறினார்.

கரூர்

நலத்திட்ட உதவிகள்

கரூர் மாவட்டம், புகழூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாளான ேநற்று விவசாய குடிகள் மாநாடு நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பல்வேறு துறைகளை சார்ந்த 191 பயனாளிகளுக்கு ரூ.89 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

"ஜமாபந்தி என்பது ஒரு பாரசீக சொல்" வருவாய் தீர்வாயம் நிறைவு நாளில் குடிகள் மாநாடு நடத்துவது ஒரு சிறப்பான நிகழ்வாகும். பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது குறைகளை தீர்வுக் கொள்ள பல்வேறு வழிவகைகள் தற்போது வந்துள்ளது. தற்போது இருந்த இடத்தில் இருந்து தங்களது குறைகளை தெரிவிக்கும் வகையில் வசதிகள் வந்து உள்ளது.

வீட்டுமனை பட்டாக்கள்

பல்வேறு ஆண்டுகளாக கிடைக்காமல் இருந்த வீட்டு மனை பட்டாக்கள் தற்போது உங்களுக்கு கிடைத்து உள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அடுத்ததாக நம்ம ஊர் மக்களுக்கு சுத்தம் என்பதை வலியுறுத்தி "கவின்மிகு கரூர்" என்ற இயக்கத்தை உருவாக்க உள்ளோம், என்றார்.

இதில், புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன், துணைத்தலைவர் பிரதாபன், புகழூர் நகராட்சி கமிஷனர் கனிராஜ், வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

867 மனுக்கள்

கரூர் மாவட்டத்தில் 1432 பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயத்தின் போது நேற்று பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள்:- கரூர் வட்டத்தில் 107 மனுக்களும், அரவக்குறிச்சி வட்டத்தில் 100 மனுக்களும், மண்மங்கலம் வட்டத்தில் 77 மனுக்களும், குளித்தலை வட்டத்தில் 95 மனுக்களும், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் 155 மனுக்களும், கடவூர் வட்டத்தில் 131 மனுக்களும், புகழூர் வட்டத்தில் 202 மனுக்களும் என மொத்தம் 867 மனுக்கள் பெறப்பட்டன.


Next Story