மக்கள் குறைதீர்ப்பு சிறப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம்
குடியாத்தம் தொகுதியில் நடந்த சிறப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் உதவி கலெக்டர் தலைமையில் நடந்தது.
குடியாத்தம்
குடியாத்தம் தொகுதியில் நடந்த சிறப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் உதவி கலெக்டர் தலைமையில் நடந்தது.
ஆலோசனை கூட்டம்
குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த ஜூன் மாதம் 8-ந்் தேதி மக்கள் குறைத்தீர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கதிர்ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அமலுவிஜயன், வில்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
இந்த முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, தொகுப்பு வீடுகள், ரேஷன் கார்டு, கடனுதவி உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். இந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் தலைமையில் நடந்தது.
தாசில்தார்கள் குடியாத்தம் எஸ்.விஜயகுமார், பேரணாம்பட்டு வி.கே.நெடுமாறன், சமூக நல பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் எம்.நெடுமாறன், விநாயகமூர்த்தி, ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.சாந்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
தொழிற் பூங்கா
கூட்டத்தில் மக்கள் குறை தீர்ப்பு சிறப்பு முகாமில் அளிக்கப்பட்ட மனுக்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்தும், அந்த மனுக்களில் எத்தனை பயனாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்தும் இன்னும் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
வீட்டுமனை கேட்டு மனு அளித்த பொதுமக்களின் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து உடனடியாக வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுப்பது, தொகுப்பு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுப்பது, குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் மகளிர் கல்லூரி அமைக்க நிலம் கையகப்படுத்துவது, சிப்காட் தொழிற் பூங்கா, கைத்தறி ஜவுளி பூங்கா அமைக்க தேவையான இடங்களை கையகப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.