சமூக சேவகர், தொண்டு நிறுவனத்தினருக்கு விருது
சமூக சேவகர், தொண்டு நிறுவனத்தினருக்கு விருது
திருப்பூர்,
பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்துக்கு சுதந்திர தின விழாவின்போது முதல்-அமைச்சரால் 2023-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணியாற்றியவராக இருக்க வேண்டும். தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும், பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறப்பாக சேவை புரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
இந்த விருதை பெறுவதற்கு திருப்பூர் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் அரசின்https://awards.tn.gov.inஎன்றஇணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். வருகிற 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
--------------