நடிகர் அர்ஜூன்தாஸ் சாமி தரிசனம்


நடிகர் அர்ஜூன்தாஸ் சாமி தரிசனம்
x

பழனி முருகன் கோவிலில் நடிகர் அர்ஜூன்தாஸ் சாமி தரிசனம் செய்தார்.

திண்டுக்கல்

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் அவ்வப்போது பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனர். அந்தவகையில் தமிழ் சினிமாவில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த அர்ஜூன்தாஸ் நேற்று பழனி முருகன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார். அடிவாரத்தில் இருந்து ரோப்கார் வழியாக கோவிலுக்கு சென்ற அவர், சாயரட்சை பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் செய்தார். தொடர்ந்து வெளிப்பிரகாரத்தை வலம் வந்தபோது பக்தர்கள் பலர் அவருடன் நின்று 'செல்பி' எடுத்தனர். பின்னர் மீண்டும் ரோப்கார் வழியாக அடிவாரம் வந்து காரில் புறப்பட்டு சென்றார்.


Next Story