நடிகர் பாக்யராஜ் சாமி தரிசனம்
பழனி முருகன் கோவிலில் நடிகர் பாக்யராஜ் சாமி தரிசனம் செய்தார்.
திண்டுக்கல்
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில், கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி தற்போது மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இதனால் தினமும் ஏராளமான பக்தர்கள், பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் சினிமா நடிகர்-நடிகைகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அவ்வப்போது வந்து தரிசனம் செய்கின்றனர். அந்த வகையில் நடிகர் பாக்யராஜ், அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நேற்று காலை பழனிக்கு வந்தனர். பின்னர் அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர்கள், பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து மீண்டும் ரோப்கார் மூலம் அடிவாரம் வந்து காரில் புறப்பட்டு சென்றனர். நடிகர் பாக்யராஜை கண்ட பக்தர்கள், பொதுமக்கள் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
Related Tags :
Next Story