தீப்பிடித்த செல்போன் கோபுரத்தை அகற்றகோரி பொதுமக்களுடன் நடிகர் மகேஷ் மனு


தீப்பிடித்த செல்போன் கோபுரத்தை அகற்றகோரி பொதுமக்களுடன் நடிகர் மகேஷ் மனு
x
தினத்தந்தி 20 Sept 2022 12:30 AM IST (Updated: 20 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

தீப்பிடித்த செல்போன் கோபுரத்தை அகற்றகோரி பொதுமக்களுடன் நடிகர் மகேஷ் மனு கொடுத்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போன் கோபுரத்தில் தீ பற்றியது. இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் செல்போன் கோபுரம், ஜெனரேட்டர் அறை சேதம் அடைந்தன. இந்தநிலையில் அந்த செல்போன் கோபுரத்தை அகற்றும்படி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சினிமா நடிகர் மகேஷ் ஆகியோர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், எங்கள் பகுதியை சுற்றிலும் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த குடியிருப்புகளுக்கு நடுவே செல்போன் கோபுரம் அமைந்து உள்ளது. இந்த செல்போன் கோபுரத்தில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் புற்றுநோய் பாதிப்பு பலருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதற்கிடையே கடந்த 15-ந்தேதி செல்போன் கோபுரம் தீப்பிடித்து எரிந்தது. பொதுமக்கள் தகவல் தெரிவித்ததால் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

அதேநேரம் தீ விபத்தால் ஒரு வீட்டில் ரூ.1 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு இருந்த குழாய்கள் எரிந்து நாசமாகின. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வசிக்கும் நிலை உள்ளது. இதுபற்றி புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் செல்போன் கோபுரத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், என்று கூறப்பட்டு உள்ளது.


Next Story