தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா


தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் அவரது அண்ணன் கலந்து கொண்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நடந்த நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாவில், அவரது அண்ணன் சத்தியநாராயணராவ் பங்கேற்றார்.

ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா

தூத்துக்குடியில் நேற்று தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் நடிகர் ரஜினிகாந்தின் 73-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தூத்துக்குடி தெப்பகுளம் சுந்தரபாண்டிய விநாயகர் கோவில் ரசிகர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து சிவன்கோவில் வரை பெண்கள் 500 பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தை நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணராவ் கெய்க்வாட் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் சிவன் கோவிலில் ரஜினிகாந்த் நலமுடன் வாழ சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பின்னர் சத்திய நாராயணராவ் கெய்க்வாட் கூறுகையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைக்கு பாபா திரைப்படம் வந்துள்ளது. இந்த திரைப்படத்தினை மக்களும், ரசிகர்களும் புதிதாக வந்த திரைப்படம் போல் கொண்டாடி வருகின்றனர் என்று கூறினார்.

கழுகுமலை

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் வேல்சாமி தலைமையில் அர்ச்சனை மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றத்தினர் அன்னதானம் வழங்கினர். இதில் மன்றத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவை யொட்டி ரத்ததான முகாம் நகரச் செயலாளர் மகேஷ் பாலா தலைமையில் நேற்று நடந்தது. ஆஸ்பத்திரி நிலைய டாக்டர் பூவேனேஸ்வரி தலைமையில் மருத்துவக் குழுவினர் 25 பேரிடம் ரத்ததானம் பெற்றனர். நிகழ்ச்சியில் மன்ற நிர்வாகிகள் செய்யது அலி, சந்தன மாரியம்மன், சுடலைமணி, சதீஷ், கணேசன், ராஜிவ், ஷேக் முகமது மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ரஜினிகாந்த் பிறந்த நாளை யொட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் மற்றும் புது கிராமம் வேம்படி சுடலைமாடசாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story