'அரசியலில் மவுன விரதம் கடைபிடிக்கிறேன்' என்று நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்
‘அரசியலில் மவுன விரதம் கடைபிடிக்கிறேன்’ என்று நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று மாலையில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியலில் நான் மவுன விரதம் கடைபிடிக்கிறேன். எனினும் அரசியலுக்கு அழைத்தால் எப்போதும் பணி செய்ய தயாராக இருக்கிறேன். நான் சார்ந்த கட்சி என்னை அழைத்தால் அவர்களுக்குதான் லாபம், அழைக்காவிட்டால் எனக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை. அரசியலில் ஒருவர் கருத்து சொல்லும்போது, அதனால் பிரச்சினை ஏற்பட்டால், அந்த கட்சிதான் அவரை பாதுகாக்க வேண்டும்.
வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதா 400 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பார். தமிழகத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திறம்பட செயல்படுகிறார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுவது அனைவருக்கும் தேசப்பற்றை வளர்க்கும். உலக நாடுகளில் இந்தியா போன்ற சுதந்திர நாடு எங்குமில்லை. இங்கு அனைத்து மக்களுக்கும் அளவு கடந்த சுதந்திரம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
----