மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்கிறார் நடிகர் விஜய்...! நிர்வாகிகளுக்கு தடபுடல் விருந்து
3 மாவட்ட நிர்வாகிகளை அவர் சந்திக்கிறார். சென்னை, பனையூரில் உள்ள அலுவலகத்தில் சந்திப்பு நடைபெறுகிறது
சென்னை,
நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார்.அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்ட நிர்வாகிகளை அவர் சந்திக்கிறார். சென்னை, பனையூரில் உள்ள அலுவலகத்தில் சந்திப்பு நடைபெறுகிறது ., மக்கள் இயக்க செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து அறிவுரைகளை வழங்குவார் எனவும் சொல்லப்படுகிறது
இந்த நிலையில் பனையூரில் உள்ள அலுவலகத்தில் நிர்வாகிகளுக்கு விருந்து அளிப்பதற்காக மட்டன் பிரியாணி தயாராகியுள்ளது.அடையாள அட்டை வைத்துள்ள நிர்வாகிகளுக்கு மட்டும் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story