கி.பி. 10-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு


கி.பி. 10-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு
x

பூட்டுத்தாக்கு கிராமத்தில் கி.பி. 10-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

பூட்டுத்தாக்கு

பூட்டுத்தாக்கு கிராமத்தில் கி.பி. 10-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பலகை கல்

பூட்டுத்தாக்கு கிராமத்தில் அமர்ந்தவாழ் அம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மனை இப்பகுதி மக்கள் கிராம தேவதையாக வணங்கி வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கோவில் அமைந்த பகுதி முட்கள் நிறைந்து காணப்பட்டது. அதை கோவில் நிர்வாகி ஜனதா சண்முகம் என்பவர் அகற்றி சிமெண்டு தளம் அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.

அப்போது அங்கு மண்ணில் கல்வெட்டுடன் கூடிய பலகை கல் ஒன்று புதைந்திருந்தது அவருக்கு தெரியவந்தது. பின்னர் அந்த கல்லினை கோவில் வளாகத்தில் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டது.

இந்தநிலையில் அங்கு கோவில் எதிரே கால்வாய் அமைக்கும் பணியின் போது பணியாளர்கள் அந்த கல்லினை அதன் மேற்பகுதியில் வைத்தனர். அதன்மீது பலர் நடந்து கோவிலுக்கு வந்து சென்றனர்.

ஆய்வு

இதுகுறித்து வரலாற்று ஆர்வலர்கள் சரவணராஜா, நரசிம்மன் ஆகியோருக்கு தகவல் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அங்கு சென்று, கல்லை எடுத்து தூய்மையாக்கி பின்னர் கல்வெட்டு குறித்து ஆய்வு செய்தனர்.

அதில் கல்கி எழுதிய வரலாறும், அவர் கற்பனை கலந்த பொன்னியின் செல்வன் புதினத்தில் பாண்டிய மன்னனை போரில் தலை கொய்த சோழ இளவரசனுக்கு துணையாக இருந்த தொண்டை மண்டல அரசனாக ஆட்சி புரிந்த பார்த்திவேந்திரர் காலத்தைய கல்வெட்டு என்பது தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து கோவில் நிர்வாகிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அந்த கல்வெட்டினை மக்கள் பார்க்கும் வகையில் கோவிலில் பதிக்கப்பட்டது.

அதன் அர்த்தம் குறித்து மற்றவர்கள் படிக்கும் வகையில் தற்போதைய பேச்சுத்தமிழிலும் புதியதாக கல்வெட்டு அங்கு வைக்கப்பட்டது.

10-ம் நூற்றாண்டு

இதுகுறித்து வரலாற்று ஆர்வலர்கள் கூறியதாவது:-

இந்த கல்வெட்டு 10-ம் நூற்றாண்டை சேர்ந்தது. தொண்டை மண்டல பகுதியை ஆட்சி புரிந்த பார்த்திவேந்திரன் என்ற மன்னரின் பத்தாவது ஆட்சி காலத்தில் இக்கல்வெட்டு வைக்கப்பட்டது.

அதில், இந்த கோவிலை சீர்செய்யும் ஆன்மிக பணியினை மேற்கொண்ட தென் ஈழச் தன்றன் என்பவரின் மகன் கொங்கவாள் காமுண்டன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அவர் மேற்கொண்ட இந்த பணியினை, பின்வரும் காலத்தில் பாதிப்படையாமல் காப்பவர்களின் பாதத்தை தன் தலைமேல் வைத்து தாங்குவேன் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story