ஆதார் சேவை சிறப்பு முகாம்
ஆவுடையானூரில் ஆதார் சேவை சிறப்பு முகாம் நடைபெற்றது.
தென்காசி
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் பஞ்சாயத்து, இந்திய அஞ்சல் துறை இணைந்து நடத்திய ஆதார் சேவை சிறப்பு முகாம் ஆவுடையானூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. முகாமை பஞ்சாயத்து தலைவர் ரா.குத்தாலிங்கராஜன் என்ற கோபி தொடங்கி வைத்தார். தென்காசி அஞ்சலக உபகோட்ட ஆய்வாளர் செல்வபாரதி, கிளை அஞ்சலக அதிகாரி ஷாகிரா பானு, ஊராட்சி செயலர் சவுந்தர், அஞ்சலக ஊழியர் ஜெகன், உதவியாளர், அஞ்சலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் புதிய ஆதார் எடுத்தல், அனைத்து வகையான திருத்தம், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கருவிழி- கைரேகை பதிவு செய்தல் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முகாம் இன்றும் (புதன்கிழமை) நடைபெறுகிறது.
Related Tags :
Next Story