புதிய துணை போலீஸ் கமிஷனராக ஆதர்ஷ் பசேரா பொறுப்பேற்பு


புதிய துணை போலீஸ் கமிஷனராக ஆதர்ஷ் பசேரா பொறுப்பேற்பு
x

நெல்லை மாநகர புதிய துணை போலீஸ் கமிஷனராக ஆதர்ஷ் பசேரா பொறுப்பேற்றார்.

திருநெல்வேலி

நெல்லை மாநகர கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக இருந்த சீனிவாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு பணிமாறுதல் செய்யப்பட்டார். இதனையடுத்து சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஆதர்ஷ் பசேரா நேற்று காலையில் புதிய துணை போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) பிரவேஷ்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நெல்லை மாநகரில் ரவுடிகளுக்கு இடமில்லை. குற்ற செயல்களில் யாரும் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களிடம் சமூகநல்லிணக்கம் ஏற்பட நடவடிக்கை எடுக்கப்படும். மாநகரில் கடைசியாக நடந்த பல கொலைகள் எதுவும் சாதி ரீதியாக நடந்தது இல்லை. தனிப்பட்ட விரோதங்களால் நடந்துள்ளன. அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

புதிய துணை போலீஸ் கமிஷனர் ஆதர்ஷ் பசேரா 2017-ம் ஆண்டு இந்தியா காவல்பணிக்கு தேர்வானார். சென்னை திருவள்ளூருவில் பயிற்சி உதவி போலீஸ் சூப்பிரண்டாகவும், செங்கல்பட்டில் உதவி போலீஸ் சூப்பிரண்டாகவும், பின்னர் பதவி உயர்வு பெற்று சென்னை டி.நகர் துணை கமிஷனராகவும், அதன்பின்னர் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றி உள்ளார். இவரின் தந்தை ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story