மேலாண்மை கல்வித்துறையில் புதிய பாடத்தொகுப்பு சேர்ப்பு: சென்னை ஐ.ஐ.டி. அறிவிப்பு


மேலாண்மை கல்வித்துறையில் புதிய பாடத்தொகுப்பு சேர்ப்பு: சென்னை ஐ.ஐ.டி. அறிவிப்பு
x

சென்னை ஐ.ஐ.டி.யில் மேலாண்மை கல்வித்துறையின் பணிபுரியும் தொழில் வல்லுனர்களுக்கான எக்ஸிகியூட்டிவ் எம்.பி.ஏ. பாடத்திட்டத்தில் ‘சர்வதேச ஆழ்ந்த கற்றல்' என்ற பாடத்தொகுப்பு சேர்க்கப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி.யில் மேலாண்மை கல்வித்துறையின் பணிபுரியும் தொழில் வல்லுனர்களுக்கான எக்ஸிகியூட்டிவ் எம்.பி.ஏ. பாடத்திட்டத்தில் 'சர்வதேச ஆழ்ந்த கற்றல்' என்ற பாடத்தொகுப்பு சேர்க்கப்பட்டு உள்ளது. மேலாண்மை கல்வித்துறை அடுத்த பேட்ஜ்-க்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதற்காக விண்ணப்பிக்க அக்டோபர் 19-ந்தேதி கடைசி நாளாகும். விருப்பமுள்ள மாணவர்கள் https:doms.iitm.ac.in/emba/ என்ற ஆன்லைன் முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி. மேலாண்மை கல்வித்துறை தலைவர் எம்.தேன்மொழி கூறுகையில், நவீன பாடத்திட்டம், செயல்திட்டம், டிஜிட்டல் முறையில் கவனம் செலுத்துதல், வலுவான குழு கற்றல் ஆகியவை தொழில் வல்லுனர்களை புதிய மாற்றத்தையும், நிறுவனங்களில் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் தலைவர்களாக மேம்படுத்துகின்றன என்றார்.


Next Story