பல்வேறு துறைகளின் காலிப்பணியிடங்கள் குறித்து அரசுக்கு கருத்துரு அரசு கூடுதல் தலைமை செயலாளர் தகவல்
திருப்பத்தூர் மாவடடடத்தில் பல்ேவறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்ப்பட்டுள்ளது என அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஜவகர் தெரிவித்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவடடடத்தில் பல்ேவறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்ப்பட்டுள்ளது என அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஜவகர் தெரிவித்தார்.
ஆய்வுக்கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் பணிகள் மற்றும் பணியாளர் காலிப்பணியிடங்கள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி.எஸ்.ஜவஹர் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் அமர்குஷ்வாஹா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்,ஊரக வளர்ச்சி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பள்ளிக்கல்வி, தோட்டக்கலை, சமூக நலம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, சுகாதாரம், தமிழ்நாடு மின்சாரம் மற்றும் பகிர்மான கழகம், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் காலிப்பணியிடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அரசுக்கு கருத்துரு
அதன்பின்னர் கூடுதல் தலைமை செயலாளர் ஜவகர் கூறியதாவது:-
அனைத்துறைகளின் சர்பில் காலிப்பணியிடங்களின் விவரங்கள் ஏற்கனவே தமிழக அரசிற்கு கருத்துரு அனுப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு இறுதி ஆணைகள் பிறப்பிக்கப்படாமல் நிலுவையில் இனங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் எதிரே நீர்வழி பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதையும் பெரிய ஏரியை மேம்பாடு செய்வது தொடர்பாகவும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் பழைய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இயங்கிவரும் ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியை ஆய்வு செய்து, விடுதியில் தங்கியுள்ள மாணவிகளிடம் கலந்துரையாடல் நடந்தது. அப்போது எதாவது குறைகள் இருப்பின் கலெக்டரின் தொலைப2ேசி எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம் எனவும், உங்களுக்கு தேவையான அடிப்படைகள் செய்து கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட வன அலுவலர் நாக சதீஷ் கிடிஜாலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், பழங்குடியினர் நல திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.