காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் கூடுதல் தலைமை செயலாளர் திடீர் ஆய்வு
காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் கூடுதல் தலைமை செயலாளர் திடீர் ஆய்வு நடத்தினார்.
திருச்சி
திருச்சி காட்டூரில் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தென்காசிஜவகர் நேற்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவிகளின் கணினி வகுப்பறையை ஆய்வு செய்ததோடு, மாணவிகளுக்கு கணினி கல்வி கற்பிக்கும் முறையையும், மாணவிகள் கணினியை பயன்படுத்துவதையும் பார்வையிட்டார். மேலும் பள்ளி மாணவிகளுடன் அவர் கலந்துரையாடினார். பின்னர் பள்ளிக்கு தேவையான உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story