கோத்தகிரி அருகே ரூ.62 லட்சத்தில் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்-பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார்

கோத்தகிரி அருகே ரூ.62 லட்சத்தில் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்-பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே ரூ.62 லட்சத்தில் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்-பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார்

நீலகிரி

கோத்தகிரி

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் கெரடாமட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 62 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியினை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அம்ரித் அங்கு நடைபெற்ற பூமி பூஜையில் கலந்துக் கொண்டு பணிகளை தொடங்கி வைத்து பேசினார். இதில் குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷணகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஜெயராமன், மாவட்ட ஊராட்சி தலைவர் பொந்தோஸ், ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், உதவி செயற்பொறியாளர் சுரேஷ், தாசில்தார் காயத்ரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனார்த்தனன், ஆறுமுகம், ஊராட்சி தலைவர் சுப்பிகாரி, தலைமை ஆசிரியை மீனா உள்பட அரசுத் துறை அதிகாரிகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story