சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகள் இருவர் இன்று பதவியேற்பு!

சென்னை ஐகோர்ட்டு கூடுதல்  நீதிபதிகள் இருவர் இன்று பதவியேற்பு!
x
தினத்தந்தி 6 Jun 2022 10:58 AM IST (Updated: 6 Jun 2022 11:06 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட சுந்தர் மோகன், குமரேஷ் பாபு ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட சுந்தர் மோகன், குமரேஷ் பாபு ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

முன்னதாக, அவர்கள் இருவருக்கும் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 58-ஆக உயர்ந்தது.

முன்னதாக, சென்னை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதிகளாக இருந்து வந்த 8 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம் ஒப்புதல் அளித்து இருந்தது.

இந்த நிலையில், அவர்களுக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவர்கள் அனைவரும் கடந்த 2020 டிசம்பர் 3 முதல் கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்ற நிலையில், கடந்த வாரம் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

Next Story