கொத்தனாரின் மர்ம உறுப்பை அறுத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது


கொத்தனாரின் மர்ம உறுப்பை அறுத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
x

கொத்தனாரின் மர்ம உறுப்பை அறுத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

திருப்பூர்

காங்கயம்,

காங்கயம் அருகே லிப்ட் கொடுப்பது போல் அழைத்து சென்று கொத்தனாரின் மர்ம உறுப்பை அறுத்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செயதனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மர்ம உறுப்பு அறுப்பு

தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் அருண்பாண்டி (வயது 30). திருப்பூர் வேலம்பாளையம் படையப்பா நகரில் தங்கி கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருடைய நண்பர்கள் சேலம் மாவட்டம் அல்லிக்குட்டையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மணி (38) மற்றும் சிதம்பரம் பூதகேணியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (25).

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 12-ந்தேதி சொந்த ஊர் செல்வதற்காக கோவில்வழி பஸ் நிலையத்தில் மது போதையில் அருண்பாண்டி நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மணி மற்றும் ஹரிகிருஷ்ணன் இருவரும் அருண்பாண்டியை தாராபுரத்தில் இறக்கி விடுவதாக கூறி அழைத்து சென்றனர்.

கொடுவாய் அருகே சென்றபோது மோட்டார்சைக்கிளை நிறுத்தி 3 பேரும் மீண்டும் மது அருந்தினர். அப்போது அருண்பாண்டி- மணி இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மணி தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த ஆயுதத்தை எடுத்து அருண்பாண்டியின் மர்ம உறுப்பை அறுத்தார். பின்னர் மணியும், ஹரிகிருஷ்ணனும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். .

மேலும் ஒருவர் கைது

இதில் மயங்கி கிடந்த அருண்பாண்டியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு திருப்பூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரை தொடர்ந்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை ஏற்கனவே கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஹரிகிரிஷ்ணனை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story