தாராபுரத்தில் பல்வேறு வீடுகளில் நகைதிருடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.


தாராபுரத்தில் பல்வேறு வீடுகளில் நகைதிருடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
x

தாராபுரத்தில் பல்வேறு வீடுகளில் நகைதிருடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்

தாராபுரம்

தாராபுரத்தில் பல்வேறு வீடுகளில் நகைதிருடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருட்டு

தாராபுரத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி அரசு பஸ் கண்டக்டர் தங்கவேல் வீட்டில் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5½ பவுன் சங்கிலி திருட்டுப்போனது. அசோக் நகர் பகுதியில் கூட்டுறவு வங்கி மேலாளர் செல்லமுத்து வீட்டில் பூட்டை உடைத்து 5பவுன் நகை, ரூ. 3லட்சம், அரை கிலோ வெள்ளி ஆகியவை 31-ந் தேதி திருட்டுப்போனது. 5-ந் தேதி கணபதி நகரில் முன்னாள் அரசு ஊழியர் ஜீவானந்தம் வீட்டில் 8 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் ெதாடர்பாக தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் சம்பவம் நடைபெற்ற வீட்டின் அருகில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான ஆசாமிகளின் அடையாளத்தை வைத்து தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மேலும் ஒருவர் கைது

இந்த நிலையில் தனிப்படை போலீசார் தாராபுரம் திருப்பூர் சாலையில் ஐ.ஐ.டி. கார்னர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த இம்ரான் (வயது 35), தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கவியரசு (25) என தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் தாராபுரத்தில் பல்வேறு வீடுகளில் நகை மற்றும் பணத்தை திருடியதாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் ஏற்கனவே கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 10 பவுன் நகை, ரூ.90ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளியான திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள மீனம்பட்டி பகுதியை சேர்ந்த ராமர் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3பவுன் நகை, அரை கிலோ வெள்ளி மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் 17 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story