காதலர் தினத்தன்று கடற்கரை, பூங்காக்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு


காதலர் தினத்தன்று கடற்கரை, பூங்காக்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு
x

காதலர் தினத்தன்று கடற்கரை, பூங்காக்களில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளதாக சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

காதலர் தினத்தன்று கடற்கரை, பூங்காக்களில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளதாக சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தெரிவித்துள்ளார்.

பேட்டி

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. போதை பொருட்கள் உபயோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் பைக் ரேஸிங் தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காதலர் தினத்தையொட்டி குமரி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடற்கரையில் கூடுதல் போலீசார்

பஸ் நிலையங்கள், பூங்காக்கள், கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பார்கள். திருவண்ணாமலையில் 4 ஏ.டி.எம். எந்திரங்களில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் குமரி மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீசார் கூடுதலாக பணியமர்த்தப்பட்டு தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story