நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு கூடுதலாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்
நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு கூடுதலாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு படிப்படியாக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நெல்லை சந்திப்பில் இருந்து திருச்செந்தூருக்கு காலை 6 மணி, 7.20 மணி, மாலை 6.45 மணி ஆகிய 3 நேரங்களில் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்கள் புறப்பட்டு செல்கின்றன. இந்தநிலையில் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு கூடுதலாக காலை 10 மணிக்கும், மாலை 4.05 மணிக்கும் 2 சிறப்பு ரெயில்கள் நேற்று முதல் இயக்கப்பட்டது. இதேபோல் திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு கூடுதலாக காலை 10.15 மணிக்கும், மாலை 4.25 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் நேற்று முதல் இயக்கப்பட்டது.
நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 7 மணி, மாலை 6.15 மணிக்கு சிறப்பு ரெயில்களும், நெல்லை -பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முதல் கூடுதலாக நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 9.10 மணிக்கும், மதியம் 1.50 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.
மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு காலை 6.40 மணி, மாலை 5.50 மணிக்கு சிறப்பு ரெயில்களும், செங்கோட்டை வழியாக பாலக்காடு -நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முதல் கூடுதலாக செங்கோட்டையில் இருந்து -நெல்லைக்கு காலை 10.05 மணி மற்றும் பிற்பகல் 2.55 மணிக்கு ரெயில்கள் இயக்கப்பட்டன.
நேற்று முதல் கூடுதலாக இயக்கப்பட்ட ரெயில்களில் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தார்கள்.