சொட்டுநீர் பாசன வயலில் அதிகாாி ஆய்வு
நீடாமங்கலம் அருகே சொட்டுநீர் பாசன வயலில் அதிகாாி ஆய்வு செய்தார்
நீடாமங்கலம்:
தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நீடாமங்கலம் வேளாண்மை கோட்டம் செட்டிச்சத்திரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட சொட்டுநீர் பாசன வயலில் நீடாமங்கலம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் ஆய்வு செய்தார். மேலும் அவர் கூறுகையில்:- இந்த ஆண்டு தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வரும்பும் விவசாயிகள் நீடாமங்கலம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தேவையான ஆவணங்களான ஆதார் அட்டை நகல் குடும்ப அட்டை நகல், கணினி சிட்டா நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு, அடங்கல் அசல், சிறு குறு விவசாயி சான்று, பண்ணை வரைபடம் ஆகியவற்றை சமர்ப்பித்து பயன்பெறலாம். ஆய்வின் போது அப்பகுதி உதவி தோட்டக்கலை அலுவலர் பாலசுந்தரம் உடன் இருந்தார்.